Home One Line P1 ரமலான்: சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க பாஸ் கோரிக்கை

ரமலான்: சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க பாஸ் கோரிக்கை

851
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரமலான் மாதத்தில் இயங்கலை சூதாட்டத்தை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய கூட்டணி அரசாங்கத்தை கூட்டரசு பிரதேச பாஸ் கட்சி வலியுறுத்துகிறது.

முஸ்லிம்கள் நோன்பு நோற்கும்போது “ஜிடிபெட் 333” இயங்கலை சூதாட்ட நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பாடல்கள் பரவியதைத் தொடர்ந்து கூட்டரசு பிரதேச பாஸ் தலைவர் அசார் யஹ்யா இந்த அழைப்பு விடுத்தார்.

“ஜிடிபெட் 333 என்ற சூதாட்ட நிறுவனத்தின் காணோலி விளம்பரத்தை பரப்புவது ரமலான் மாதத்தில் பொதுமக்களின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், மலாய்க்கார நடிகர்கள் இதன் பின்னணியில் இருப்பது சங்கடமாக இருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் சட்டத்திற்கு எதிரானது.

#TamilSchoolmychoice

“இதுபோன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூட்டரசு பிரதேச பாஸ் இன்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இதை சமாளிக்க ஏன் இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்?” அவர் இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

முன்னதாக, நோன்பு பெருநாள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரமலான் மாதத்தில் சூதாட்டத்திற்கு முஸ்லிம்களை அழைக்கும் பாடல் காணொலி ஒன்று பரப்பப்பட்டது.