“சூதாட்ட விளம்பரங்களுக்கு சமூக ஊடக பயனர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற எஸ்.கே.எம்.எம் அறிக்கையையும் நான் படித்தேன். அது எஸ்.கே.எம்.எம்மின் உறுதியான பதில் அல்ல,” என்று சாஹிட் தெரிவித்தார்.
இணைய சூதாட்ட நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒழிக்க எம்.சி.எம்.சி உறுதியான பதில் அளிக்க வேண்டும் என்று சாஹிட் கூறினார்.
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சூதாட்ட நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்த பிடிவாதமே இதற்குக் காரணம் என்றார்.
“நிறுவனங்கள் வெளிநாடுகளை அடிப்படையாகக் கொண்ட சில்லுகளைப் பயன்படுத்துவதற்கான காரணங்களும் உள்ளன,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இணைய வலையமைப்பு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை சாஹிட் நினைவுபடுத்தினார்.
“ஆகவே, எம்சிஎம்சி ஆயிரக்கணக்கான ஆபாச வலைத்தளங்களைத் தடுப்பதைப் போல, அனைத்து இணைப்புகளையும் அல்லது இயங்கலை சூதாட்ட வலைத்தளங்களையும் தடுக்க முடியும், ”என்று அவர் கூறினார்.