Home நாடு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி வழங்கப்படும்.

282,000 தடுப்பூசி வந்துவிட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

“அஸ்ட்ராசெனெகா பயன்படுத்தப்படுவது பாதுகாப்பானது. அது பயனுள்ளதாக இருக்கும். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் பொருத்தமான பிற குழுக்களுக்கு இதைப் பயன்படுத்துவோம், ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.