Home இந்தியா கறுப்புச் சந்தையில் பிராணவாயு சிலிண்டர் 50,000 ரூபாய் வரை விற்பனை

கறுப்புச் சந்தையில் பிராணவாயு சிலிண்டர் 50,000 ரூபாய் வரை விற்பனை

401
0
SHARE
Ad

புது டில்லி: டில்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் படுக்கைகள் முற்றிலுமாக பயன்படுத்தப்பட்டுவிட்டன.

இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ஆனால் பிராணவாயு வசதிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் கறுப்புச் சந்தையில் உயர்ந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கறுப்புச் சந்தையிலிருந்து ஒரு பிராணவாயு சிலிண்டரை வாங்குவதற்காக மக்கள் 50,000 ரூபாய் வரை கொடுப்பதாக அது தெரிவித்துள்ளது. இது சாதாரண காலங்களில் 6,000 ரூபாய் விற்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

டில்லி, நொய்டா, லக்னோ, அலகாபாத், இந்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் படுக்கைகள் இல்லாமல் போய்விட்டன. இதனால் பல குடும்பங்கள் வீட்டிலேயே தற்காலிக ஏற்பாடுகளை நம்பியுள்ளன.

டில்லியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு தீவிர சிகிச்சைப் படுக்கைகள் இல்லை. குடும்பங்கள், அதை வாங்கக்கூடியவர்கள், செவிலியர்களை பணியமர்த்துகிறார்கள.

இந்தியா 300,000- க்கும் அதிகமான சம்பவங்களை பல நாட்களாகப் பதிவு செய்து வருகிறது. இது புதிய தினசரி உலகளாவிய சாதனைகளை படைத்துள்ளது.

திங்களன்று, ஐந்தாவது நாளாக அதிக தினசரி கொவிட்-19 சம்பவங்களை அது பதிவு செய்துள்ளது. முந்தைய 24 மணி நேர காலகட்டத்தில் 352,991 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 2,812 இறப்புகள் பதிவாகியுள்ளன.