Home உலகம் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வழிவிட வேண்டி பைடன் கோரிக்கை

இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு வழிவிட வேண்டி பைடன் கோரிக்கை

826
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புதன்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பில், போர்நிறுத்தத்திற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை எதிர்பார்ப்பதாகக் கூறியதை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒன்பது நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே வன்முறை வெடித்ததிலிருந்து இது அவர்களின் நான்காவது உரையாடலாகும்.

காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக 64 குழந்தைகள் மற்றும் 38 பெண்கள் உட்பட குறைந்தது 227 பாலஸ்தீனியர்கள் மரணமுற்றுள்ளனர். 3,400- க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் அதன் நகரங்களில் வீசப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலில் குறைந்தது 12 பேர் இறந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“யுத்த நிறுத்தத்திற்கான பாதையில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை எதிர்பார்க்கிறேன் என்று அதிபர் பிரதமருக்கு தெரிவித்தார்,” என்று வெள்ளை மாளிகை கூறியது.

பைடனுடன் பேசிய பின்னர் ஓர் அறிக்கையில், ” நோக்கம் அடையும் வரை – இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பை மீண்டும் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பேன்,” என்று நெதன்யாகு கூறியதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.