Home நாடு சுய கட்டுப்பாடுகளை அறிவுறுத்திய சுகாதார அமைச்சு

சுய கட்டுப்பாடுகளை அறிவுறுத்திய சுகாதார அமைச்சு

530
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதன்கிழமை தினசரி கொவிட்-19 சம்பவங்கள் 6,075- ஐ எட்டியுள்ளன. இது கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்க அதிக அளவில் விழிப்புடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், கொவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க சுய கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மக்களுக்கு சுகாதார அமைச்சு இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“வாரத்திற்கு ஒரு முறை தேவையான பொருட்களை வாங்க சந்தை அல்லது மளிகைக்குச் செல்லுங்கள். வாகனங்களுக்கு எண்ணெயை முழுமையாக நிரப்பவும். குடும்ப உறுப்பினர்களுடன் ஐந்து நேர பிரார்த்தனை. இயங்கலை மூலம் வாங்குதல்களை மேம்படுத்துங்கள். விருந்தினர்களை ஏற்க வேண்டாம்,” என்று சுகாதார அமைச்சின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.