கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பாதிப்பின் போது மக்களையும் நாட்டையும் முதன்மைப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசியல் கட்சிகளிடையேயும் புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றும் மக்களவைத் துணைத் தலைவர் அசலினா ஓத்மான் கூறினார்.
“அரசியல் எனும் போது, எல்லாம் அனுமதிக்கப்படவில்லை. நண்பர்களாக இருக்க முடியவில்லை, பேச அனுமதிக்கப்படுவதில்லை. இது அனைத்து அரசியல் கட்சிகளிடமும் செய்ய வேண்டிய ஒரு பயமுறுத்தும் விஷயம். இது உண்மையான மலேசியா அல்ல, ” என்று நேற்று அசலினா கூறினார்.
கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ளவும் விமர்சனங்களை வழங்கவும் ஒரு வழி இருக்க வேண்டும் என்று அசலினா கூறினார்.
அனைத்து கட்சிகளிடையேயும் அரசியல் பேசும் வழக்கு நிறுத்தப்பட்டு, நாடு மேன்மையடைவதை மக்கள் காண, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.