Home நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை

477
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளைப் பார்வையிட மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்க முடியும், ஆனால் இன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் முழு கட்டுப்பாட்டின் போது எந்தவொரு நிகழ்ச்சிகளையும் நடத்தவோ அல்லது கலந்து கொள்ளவோ ​​அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த விடயம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள சமீபத்திய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த நிகழ்ச்சியையும் செய்யாமல் அந்தந்த தொகுதிகளுக்கு வருகை தர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைக் கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.