Home நாடு கொவிட்-19: மரணங்கள் 73 – புதிய தொற்றுகள் 5,671

கொவிட்-19: மரணங்கள் 73 – புதிய தொற்றுகள் 5,671

793
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 5,671-ஆக பதிவாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 639,562 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சின் அறிக்கை இந்த விவரங்களைத் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மொத்தம் பதிவான 5,671 தொற்று சம்பவங்களில் 5,663 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 8 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7,325-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 556,030 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 79,848 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 911 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 462 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 73-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,684-ஆக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையில் நேற்று ஜூன் 9-ஆம் தேதி வரையில் நாட்டில் கொவிட் தடுப்பூசி முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 154,866 எனவும் சுகாதார அமைச்சு அறிவித்தது.