Home உலகம் ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – போலந்து 1; ஸ்பெயினைத் தடுத்து நிறுத்திய போலந்து

ஈரோ 2020 : ஸ்பெயின் 1 – போலந்து 1; ஸ்பெயினைத் தடுத்து நிறுத்திய போலந்து

1325
0
SHARE
Ad

செவில் (ஸ்பெயின்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் போலந்து – ஸ்பெயின் இரண்டும் தலா ஒரு கோல் போட்டு 1-1 என சமநிலை கண்டன.

ஐரோப்பியக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்பெயினை இதன் மூலம் போலந்து தடுத்து நிறுத்தி தடுமாறச் செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் செவில் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

ஸ்பெயின் ஐரோப்பியக் கிண்ணத்தை ஏற்கனவே வெற்றி கொண்ட குழுக்களுள் ஒன்றாகும்.

சனிக்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு:

ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1

போர்ச்சுகல் 4 – ஜெர்மனி 2

ஸ்பெயின் 1 – போலந்து 1