Home உலகம் ஈரோ 2020 : ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 2; போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த...

ஈரோ 2020 : ஜெர்மனி 4 – போர்ச்சுகல் 2; போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஜெர்மனி

1249
0
SHARE
Ad

மூனிக் (ஜெர்மனி) – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அதிர்ச்சி தரும் வகையில் 4-2 கோல் எண்ணிக்கையில் போர்ச்சுகலைத் தோற்கடித்தது.

ஜெர்மனியின் மூனிக் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

போர்ச்சுகல் நடப்பு ஐரோப்பியக் கிண்ண வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் வெற்றியாளராகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது போர்ச்சுகல் குழுதான்.

#TamilSchoolmychoice

ஜெர்மனியுடனான ஆட்டத்தில் போர்ச்சுகலின் முதல் கோலை கிறிஸ்டியானோர ரொனால்டோ அடித்தார்.

எஃப் பிரிவுக்கான ஆட்டமாகும் இது. இந்தப் பிரிவில் பலமான 3 குழுக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

போர்ச்சுகல், ஜெர்மனி, பிரான்ஸ் என பலம் பொருந்திய 3 குழுக்களுமே இந்த எஃப் பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன.

சனிக்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு:

ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1

போர்ச்சுகல் 4 – ஜெர்மனி 2

ஸ்பெயின் – போலந்து (ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு நுடைபெறும்)