Home உலகம் ஈரோ 2020 : ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1

ஈரோ 2020 : ஹங்கேரி 1 – பிரான்ஸ் 1

1338
0
SHARE
Ad

புடாபெஸ்ட் (ஹங்கேரி) :  ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹங்கேரியும் பிரான்சும் மோதின.

எஃப் (F) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்களே இருந்த நேரத்தில் ஹங்கேரி ஒரு கோலைப் போட்டு பிரான்சுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

இருப்பினும் அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரான்சும் தொடர்ந்து ஒரு கோலைப் போட்டு சமநிலை கண்டது.

#TamilSchoolmychoice

இறுதியில் 1-1 என்ற நிலையில் இரண்டு குழுக்களுமே வெற்றி தோல்வி இன்றி ஆட்டத்தை முடித்துக் கொண்டன.

எஃப் பிரிவில் இன்று மற்றொரு ஆட்டம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் காற்பந்து இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போர்ச்சுகல் – ஜெர்மனி இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. ஜெர்மனியின் மூனிக் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

சனிக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் மற்ற ஆட்டங்கள் பின்வருமாறு:

போர்ச்சுகல் – ஜெர்மனி

ஸ்பெயின் – போலந்து