Home நாடு மஸ்லான் லாசிம் : காவல் துறையின் புதிய துணைத் தலைவர்

மஸ்லான் லாசிம் : காவல் துறையின் புதிய துணைத் தலைவர்

530
0
SHARE
Ad

கோலாலம்பூர் : காவல் துறையின் புதிய துணைத் தலைவராக (துணை ஐஜிபி) மஸ்லான் லாசிம் நியமிக்கப்பட்டிருக்கிறார் என உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் அறிவித்தார்.

59 வயதான மஸ்லான் லாசிம் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப இலாகாவின் இயக்குனராக இதுவரை பொறுப்பேற்றிருந்தார்.

காவல்துறையின் நடப்பு துணைத் தலைவரான அக்ரில் சானி அப்துல்லா காவல் துறைத் தலைவராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையின் துணைத் தலைவர் பொறுப்பு இதுவரை காலியாக இருந்தது.

#TamilSchoolmychoice

காவல் துறை துணைத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார் மஸ்லான் லாசிம்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின்,  மாமன்னர் இந்த நியமனத்திற்கு பிரதமரின் ஆலோசனைக்கேற்ப ஒப்புதல் அளித்திருக்கிறார் எனக் கூறினார்.

அரச மலேசிய காவல்துறை ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் சைனுடின் ஹம்சா தெரிவித்தார்.

இன்று சைனுடின் ஹம்சா இந்த அறிவிப்பை வெளியிட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறைத்தலைவர் அக்ரி சானியும் உடனிருந்தார்.

கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர் மஸ்லான் லாசிம். கோலகெடா வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அவர் அறிவியல் துறையில் மனித வள நிர்வாகத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவராவார். அவரது முதல் பட்டப்படிப்பு அறிவியல் பொருளாதாரத் துறை சார்ந்ததாகும்.

கிளந்தான் மாநில காவல் துறை தலைவர், பிரதமர் துறையின் பாதுகாப்பு பிரிவு இலாகாவின் தலைமை இயக்குனர், கோலாலம்பூர் காவல்துறை தலைவர் போன்ற பொறுப்புகளில் ஏற்கனவே பணியாற்றி அனுபவம் பெற்று இருக்கின்றார் மஸ்லான் லாசிம்.