Home நாடு மால் ஹிஜ்ரா : சரவணனின் வாழ்த்துச் செய்தி

மால் ஹிஜ்ரா : சரவணனின் வாழ்த்துச் செய்தி

1071
0
SHARE
Ad

மனிதவள அமைச்சர், ம.இ.கா தேசியத் துணைத்தலைவர், டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் அவால் முஹாராம், ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் முதல் மாதம் முஹர்ரம், ஹிஜ்ரி புத்தாண்டாகத் துவங்குவதால் இன்றைய தினத்தை ஹிஜ்ரி புத்தாண்டு என உலகம் முழுதும் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவில் உள்ள முஸ்லீம் நண்பர்கள் அனைவருக்கும் அவால் முஹர்ரம் வாழ்த்துகள்.

நபிகள் நாயகம் (சல்) அவர்களும் அவருடைய தோழர் அபூபக்கரும் மக்காவைவிட்டு மதீனாவிற்குப் பாலைவெளியில் புலம்பெயர்ந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து ஹிஜ்ரி புத்தாண்டு அமைந்திருக்கிறது என அறிந்திருக்கிறேன்.

இந்தப் புத்தாண்டில் நம்மை ஆட்டிப் படைக்கும் கொடுந்தொற்றிலிருந்து மீள்வோம் என்ற நம்பிக்கையில் இந்த நன்னாளில் “இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை” என்ற வரிகளுக்கேட்ப இறைசக்தியிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்வோம்.

#TamilSchoolmychoice

கொரோனா கொடுந்தொற்றிலிருந்து விடுபட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வந்தாலும் அதன் பரவல் பெருகிய வண்ணமே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் தனிமனித ஒழுக்கமே என முன்களப் பணியாளர்கள் குறிப்பாக மருத்துவர்களும், காவல் துறை அதிகாரிகளும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். மக்களின் அலட்சியப் போக்கும், கவனக்குறைவுமே அதிகளவில் கொரோனா பெருகி வருவதற்கான காரணமாக இருந்து வருகிறது. பொது இடங்களில் இடைவெளி விட்டு இருப்பது, முகக் கவசம் அணிவது, அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்வது போன்ற நடமாட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிலர் அலட்சியம் செய்வதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல பெருநாட்கள், கொண்டாட்டங்களை நாம் நமக்குள்ளே கொண்டாடி வருகிறோம். குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க முடியவில்லை, உறவினர்களுடன் கொண்டாடி மகிழவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஒன்றினைவோம், கொரோனாவைத் துடைத்தொழிப்போம். மீண்டும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள்.