Home நாடு சாஹிட் ஹாமிடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

சாஹிட் ஹாமிடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

983
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முதுகுத் தண்டுப் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 26)  மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.

கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் காரணமாக அவர் மீதான ஊழல் வழக்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. சாஹிட்டின் ஊழல் வழக்கை செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சாஹிட் ஹாமிடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) கீழே விழுந்ததால் முதுகுப் பகுதியில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பிரதமர் இஸ்மாயில் சாப்ரி, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவரை மருத்துவமனையில் சென்று கண்டு நலம் விசாரித்தனர்.

அம்னோ, இஸ்மாயில் சாப்ரிக்கு முழு ஆதரவு வழங்கும்

இதற்கிடையில், அம்னோ, இஸ்மாயில் சாப்ரியின் புதிய அரசாங்கத்திற்கு முழு ஆதரவு வழங்கும் என்றும் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.

சில முக்கிய அம்சங்களில் இஸ்மாயில் சாப்ரியின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் இதுகுறித்து இஸ்மாயில் சாப்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் சாஹிட் ஹாமிடி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மாமன்னரின் அறிவுரையை ஏற்பது, அனைத்துக் கட்சிகளுக்கிடையிலும் ஒத்துழைப்பைக் கடைப்பிடிப்பது, பொருளாதார சவால்களை எதிர்கொள்வது, கொவிட்-19 பாதிப்புகளை சீர்ப்படுத்துவது, மக்கள் நலன்களுக்கு முக்கியத்துவம் தருவது ஆகியவையே அந்த முக்கிய அம்சங்களாகும் எனவும் சாஹிட் ஹாமிடி குறிப்பிட்டார்.