Home இந்தியா சசிகலாவுடன் சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார்

சசிகலாவுடன் சிறையில் இருந்த சுதாகரன் விடுதலையானார்

803
0
SHARE
Ad

பெங்களூரு : ஜெயலலிதா-சசிகலா தொடர்பான ஊழல் வழக்கில்  பெற்று, தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த  வி.என். சுதாகரன் இன்று விடுதலையாகிறார்.

அவர் இன்றே சென்னைக்கு அவரின் உறவினர்களால் அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சசிகலா, இளவரசி ஆகியோர் செலுத்திவிட்டனர். இதனால் இருவரும் முன்பே  விடுதலையாகிவிட்டனர்.

#TamilSchoolmychoice

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என அறிவிக்கப்பட்ட வி.என்.சுதாகரன் மட்டும் ரூ 10 கோடி அபராதம் செலுத்தவில்லை. இதனால் அவர் மட்டும் தொடர்ந்து சிறையிலிருந்தார். அவரால் அபராதத் தொகையை செலுத்த முடியாததால் நீதிமன்ற உத்தரவின்படி மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த நாட்கள் கழிக்கப்பட்டதை அடுத்து அவர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal