Home நாடு பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மாநிலங்களில் அடைமழை – வானிலை மையம் எச்சரிக்கை

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மாநிலங்களில் அடைமழை – வானிலை மையம் எச்சரிக்கை

870
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சிலாங்கூர், பகாங் மாநிலங்கள் தொடர் மழையினால் பலத்த வெள்ள சேதங்களைச் சந்தித்திருக்கும் நிலையில் வட மாநிலங்களான பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து அடை மழை பெய்யும் என மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக பேராக் மாநிலத்தில் கெரியான், லாருட், மாத்தாங், செலாமா ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் எனவும் எச்சரித்திருக்கும் வானிலை மையம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த நிலைமை நீடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் தாழ்வான நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice