சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
சிலாங்கூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இதனை அறிவித்த சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அர்ஜூனாய்டி முகமட், ஷா ஆலாமில் 14 சடலங்களும் கிள்ளான், காஜாங் வட்டாரங்களில் தலா 3 சடலங்களும், சிப்பாங்கில் இரண்டு சடலங்களும் இதுவரையில் மீட்கப்பட்டிருக்கின்றன.
மேலும் கோலசிலாங்கூர், சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளில் தலா ஒரு சடலம் மீட்கப்பட்டது.
Comments