Home நாடு வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9

வெள்ளம் : மரண எண்ணிக்கை உயர்வு – சிலாங்கூர் 24 – பகாங் 9

618
0
SHARE
Ad

ஷா ஆலாம் : அண்மைய சில நாட்களாக ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிலாங்கூரிலும், பகாங்கிலும் உயர்ந்திருக்கின்றன.

சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 24 பேர்களும், பகாங் மாநிலத்தில் 9 பேர்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

சிலாங்கூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனை அறிவித்த சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அர்ஜூனாய்டி முகமட், ஷா ஆலாமில் 14 சடலங்களும் கிள்ளான், காஜாங் வட்டாரங்களில் தலா 3 சடலங்களும், சிப்பாங்கில் இரண்டு சடலங்களும் இதுவரையில் மீட்கப்பட்டிருக்கின்றன.

மேலும் கோலசிலாங்கூர், சுபாங் ஜெயா ஆகிய பகுதிகளில் தலா ஒரு சடலம் மீட்கப்பட்டது.