அந்த விருந்துபசரிப்பு தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் போரிஸ் ஜோன்சன் மீதான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை மாலை (ஜனவரி 31) பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கூடியபோது, போரிஸ் ஜோன்சன் கலந்து கொண்டு தன்மீதான குற்றச்சாட்டுகளைத் தற்காத்தார். காவல் துறையினரின் விசாரணைகள் முடிவடையும்வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்றும் அதுவரையில் பிரிட்டன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைத் தனது அரசாங்கம் ஆற்றி வரும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் போரிஸ் ஜோன்சன் தனது செயலுக்காகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
முன்னாள் பிரதமர் தெரசா மே உரையாற்றும்போது, தமது அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களை பிரதமரே பின்பற்றாதது குறித்து கண்டனம் தெரிவித்தார்.
எனினும் சில விஷயங்களைத் தாம் முறையாகக் கையாளததற்காக நாடாளுமன்றத்தில் ஜோன்சன் மன்னிப்பும் கேட்டார்.