Home நாடு ஜோகூர் தேர்தல் : தேசிய முன்னணிக்கு ஆதரவான இந்தியர் கட்சிகளுக்கு வாய்ப்பா?

ஜோகூர் தேர்தல் : தேசிய முன்னணிக்கு ஆதரவான இந்தியர் கட்சிகளுக்கு வாய்ப்பா?

442
0
SHARE
Ad
டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன்

ஜோகூர் பாரு : ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் புதிய திருப்பமாக, தேசிய முன்னணிக்கு ஆதரவாக இயங்கிவரும் மக்கள் சக்தி கட்சி, ஐபிஎப், கிம்மா ஆகிய கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு வந்திருந்தபோது கருத்துரைத்த மக்கள் சக்தியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தங்களின் கட்சி போட்டியிட விரும்புவதாக அறிவித்தார்.

“நாங்கள் எங்களின் கோரிக்கையை தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் முன்வைத்திருக்கிறோம். எனினும் எந்தவித நிபந்தனைகளையும், கட்டுப் பாடுகளையும் நாங்கள் விதிக்கவில்லை. எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என்ற கோரிக்கையையும் நாங்கள் விடுக்கவில்லை. ஆனால், ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம் என்பதை மட்டும் தேசிய முன்னணிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்” என அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

ஐபிஎப் கட்சியும் (இந்தியர் முன்னேற்ற முன்னணி) நீண்ட காலமாக தேசிய முன்னணிக்கு ஆதரவாக இயங்கி வருகிறது. அந்தக் கட்சியும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு நீண்ட காலமாக போராடி வருகிறது.

இதற்கிடையில் கிம்மா என்ற இந்தியர் முஸ்லீம்களுக்கான கட்சியும் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இயங்கி வருகிறது. தேர்தலில் போட்டியிடவும் பல தருணங்களில் கோரிக்கை விடுத்திருக்கிறது.