புத்ரா ஜெயா : தொழிலாளர்களின் குறைந்த பட்சம் சம்பளம் 1,200 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.
தான் மனிதவள அமைச்சராக இருக்கும் காலகட்டத்தில், குறைந்த பட்ச சம்பளம் 1,500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டும் என தான் முன்னெடுத்த முயற்சிகளும், போராட்டங்களும் வெற்றி பெற்றிருப்பது குறித்து தான் மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைவதாகவும் சரவணன் குறிப்பிட்டார்.
தொழிலாளர் தினமான மே – 1ஆம் தேதி முதல் 1,500 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பளம் என்ற திட்டம் அமுலுக்கு வருவதாக நேற்று சனிக்கிழமை (19 மார்ச்) பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார்.