இலங்கை முழுவதும் கடுமையான அளவில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. மகிந்தவின் சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சேயும் பதவி விலக வேண்டுமென போராட்டங்களும், நெருக்கடிகளும் நாட்டில் அதிகரித்துள்ளன.
திவாலான நிலைமைக்கு ஆளாகியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்க வாய்ப்புள்ளதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித்தின் தந்தையார் பிரேமதாசாவும் இலங்கையின் முன்னாள் பிரதமராவார். விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றில் பிரேமதாசா கொல்லப்பட்டவராவார்.
நடப்பு அதிபர் கோத்தாபாய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எனினும் சஜித் இன்னும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.