புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தன்னைப் பிரதிநிதிக்க இலண்டனின் குயின்ஸ் கவுன்சில் அந்தஸ்து கொண்ட வழக்கறிஞரான ஜோநாதன் ஜேம்ஸ் லேய்ட்லா என்பவரை நியமிக்க வேண்டுமென நஜிப் துன் ரசாக்கை மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
எனினும் அந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து நஜிப்பின் வழக்கில் அவரைப் பிரதிநிதிக்க ஜோநாதன் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஜோநாதன் தனது மனுவைச் சமர்ப்பித்திருக்கிறார். வழக்கறிஞர் நிறுவனமான ஷாபி அண்ட் கோ நிறுவனம் மூலமாக அந்த மேல்முறையீட்டை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.
நஜிப்பின் மேல்முறையீட்டு வழக்கு நிறைவடைந்துவிட்ட நிலையில் ஜோநாதன் நஜிப்பைப் பிரதிநிதிக்க மேல்முறையீட்டை சமர்ப்பித்திருக்கிறார்.
நஜிப்பின் வழக்கு தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்படவிருப்பதால் அந்த மறு ஆய்வு விசாரணைக்கு வரும்போது ஜோநாதனுக்கு கூட்டரசு நீதிமன்றம் வாய்ப்பளித்தால் அவர் நஜிப்பைப் பிரதிநிதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.