தமிழ் நாட்டில் பிரபல நடிகையாக இருந்தாலும் ஆந்திரா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர் ரோஜா. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் 2014-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ரோஜா திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments