தக்ஷின் தனது மேல்முறையீட்டை சமர்ப்பித்த ஒரு நாளுக்குப் பின்னர் அவருக்கான அரச மன்னிப்பு கிடைத்திருக்கிறது. 2006 தக்ஷினை தாய்லாந்து இராணுவம் ஆட்சியிலிருந்து அகற்றியது.
“தக்ஷின் பிரதமராக இருந்தவர். நாட்டிற்கும் மக்களுக்கும் நல்ல பணிகள் ஆற்றியிருக்கிறார். மாமன்னருக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்” என அரச மன்னிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட அரசாணைக் குறிப்பு தெரிவித்தது.
மேலும் அவர் நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டார்-என்றும் தற்போது உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறார் என்றும் அரசாணைக் குறிப்பு தெரிவித்தது.
தக்ஷின் இன்னும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய தக்ஷின், கடந்த 15 வருடங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்தார். அதன் மூலம் தண்டனையை தவிர்த்து வந்தார். அவரின் மகள் தலைமையிலான அரசியல் கட்சி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. எனினும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
தாய்லாந்து பிரதமராக ஸ்ரேத்தா தவிசின் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.