Home நாடு சரவாக் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

சரவாக் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

390
0
SHARE
Ad

கூச்சிங்: சரவாக்கின் ஜெபாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தாலிப் சுல்பிலிப் (படம்) இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

72 வயதான தாலிப் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இரவே செமரியாங் முஸ்லிம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

2021 சரவாக் சட்டமன்றத் தேர்தலில் பார்ட்டி பெசாகா பூமிபுதேரா பெர்சத்துவைச் சேர்ந்த தாலிப் ஆறாவது முறையாக ஜெபாக் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

1996-இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டபோது முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாலிப் 2017 முதல் 2021 வரை மாநில அமைச்சராக பணியாற்றினார்.