Home நாடு சி.ம.இளங்கோவின் ‘யாழின் மௌனமொழி’ நூல் – சரவணன் வெளியிட்டார்

சி.ம.இளங்கோவின் ‘யாழின் மௌனமொழி’ நூல் – சரவணன் வெளியிட்டார்

377
0
SHARE
Ad

சிரம்பான் : நீண்டகாலமாக நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளராக முத்திரை பதித்து வருபவர் சி.மா.இளங்கோ. மஇகாவின் வழி அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருபவர்.

அவரின் நூல் ‘யாழின் மெளனமொழி’ கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 30-ஆம் தேதி சிரம்பானில் வெளியீடு கண்டது. மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

மஇகா நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்.

#TamilSchoolmychoice

“கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல் இலக்கியவாதியாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் கவிக்கோ சி.ம.இளங்கோவின் ‘யாழின் மெளனமொழி’ நூல் வெளியீட்டு விழாவைத் தொடக்கி வைத்தேன்.
நெகிரி மாநில ம.இ.காவும், சமூக இலக்கியப் பொது இயக்கங்களும் இணைந்து இந்த புத்தக வெளியீட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். ம.இ.காவிற்கும், இந்திய சமுதாயத்திற்கும், இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்கிற்கான நன்றிக் கடனாக நான் இதைப் பார்க்கிறேன்” என சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

“வாழுகின்ற கவிஞர்களில் தரமான படைப்பைப் படைக்கக் கூடிய கவிஞராக கவிக்கோ சி.ம.இளங்கோ அவர்கள் இன்றும் விளங்குகிறார். தலைவர்களைப் பற்றி அவர் எழுதிய வரிகள், அந்த தலைவர்களைப் போல் வாழ வேண்டும் எனும் வேட்கையை உண்டாக்கவல்லது” என்றும் சரவணன் குறிப்பிட்டார்.