Home நாடு வான் சைபுல் மீது மீண்டும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

வான் சைபுல் மீது மீண்டும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

364
0
SHARE
Ad
வான் சைபுல் வான் ஜான்

கோலாலம்பூர் :பினாங்கு, தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான வான் சைபுல் வான் ஜான் நாளை புதன்கிழமை (அக்டோபர் 25) மீண்டும் குற்றவியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார். அம்லா கள்ளப் பண பரிமாற்றம் சட்டம் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட உள்ளது. இதனை அவர் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

நாளை ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து தன் மீதான குற்றச்சாட்டுகளை தற்காக்க உள்ளதாகவும் நாட்டின் நீதித்துறை மீது இன்னும் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் வான் சைபுல் தெரிவித்தார்.

ஏற்கனவே (2023) பிப்ரவரி 21ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் வேறு குற்றங்களுக்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில்  முதல் குற்றச்சாட்டில் ஊழல் நோக்கத்தோடு லஞ்சப் பணத்தைக் கோரியதாகவும் மற்றொரு குற்றச்சாட்டில் 2022-ஆம் ஆண்டு ஜூலை 8 முதல் செப்டம்பர் 30 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் 6.96 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாகவும்  அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஜானா விபாவா என்னும் பூமிபுத்ராக்களுக்கென வழங்கப்படும் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குத்தகைகளைப் பெற்றுத் தருவதற்காக அவர் கையூட்டு பெற்றதாக  அவர் மீதான குற்றச்சாட்டுகள் விவரிக்கின்றன. அந்தத் திட்டங்களின் மதிப்பு 232 மில்லியன் ரிங்கிட்டாகும். முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது கடந்த ஆண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் அந்த ஜானா விபாவா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்தக் குற்றங்களை மறுத்து விசாரணை கோரிய வான் சைபுல் நான்கு லட்சம் ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் அவரது அனைத்துலக கடப்பிதழ் வழக்கு முடியும் வரை முடக்கப்பட்டது. அந்த வழக்கு அடுத்த ஆண்டு நடைபெற நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

ஜானா விபாவா என்ற இந்த திட்டத்தில் நிறைய ஊழல்கள் இருந்ததால் 5.7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகைகள் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தில் நிறுத்தப்பட்டுவிட்டன.