Home நாடு ரபிசி ரம்லிக்கு ஸ்டென்ட் என்னும் இரத்த நாள அடைப்பு சிகிச்சை

ரபிசி ரம்லிக்கு ஸ்டென்ட் என்னும் இரத்த நாள அடைப்பு சிகிச்சை

705
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை சரிசெய்து ரத்த ஓட்டம் சுமுகமாக இயங்கும் வண்ணம் ஸ்டென்ட் என்னும் இணைப்பு சிறு குழாய் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அந்த சிகிச்சையைத் தொடர்ந்து அவர் உடல் நலம் தேறிவருவதாகவும் உள்துறை அமைச்சரும் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளருமான நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

ரபிசி ரம்லிக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இந்த தகவல் தெரிய வந்ததாக சைபுடின் நசுத்தியோன் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரபிசி ரம்லிக்கு உடனடி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவர் உடல் நலம் தேறிவருகிறார் என்றும் விரைவில் மீண்டும் அமைச்சுப் பணிகளுக்குத் திரும்புவார் என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபா கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமாவார்.