Home நாடு ரபிசி ரம்லி நெஞ்சு வலி சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருகிறார்

ரபிசி ரம்லி நெஞ்சு வலி சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருகிறார்

355
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு அண்மையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகு அவர் உடல் நலம் தேறிவருகிறார் என்றும் விரைவில் மீண்டும் அமைச்சுப் பணிகளுக்குத் திரும்புவார் என்றும் சுகாதாரா அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபா தெரிவித்திருக்கிறார்.

ரபிசியின் உடல்நல நிலவரம் குறித்து தனக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதாகவும் டாக்டர் சாலிஹா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார் என்றும் சாலிஹா கூறினார்.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமாவார்.