Home இந்தியா நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகினார்

நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகினார்

455
0
SHARE
Ad
முன்பு கௌதமி மோடியைச் சந்தித்த கோப்புப் படம்

சென்னை: நீண்ட காலமாக பாஜகவில் இருந்து அரசியல் ஈடுபாடு காட்டிவந்த நடிகை கௌதமி அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் அவர் அண்மையக்காலமாக பாஜக நடவடிக்கைகளில் சம்பந்தப்படவில்லை.

இதன் தொடர்பில் கௌதமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சி.அழகப்பன் என்ற நபர் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“கட்சியிடமிருந்தோ அதன் தலைவர்களிடமிருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில், என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறித்து எனக்கு தெரியவந்துள்ளது” என்றும் அவர் தன் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை”  அறிந்து நொறுங்கிப் போனதாகவும் கௌதமி தெரிவித்தார்.