சென்னை : திமுகவின் நீண்ட கால, முக்கிய அமைச்சர்களில் ஒருவரும் தற்போது பொதுப் பணி அமைச்சர் அமைச்சர் பொறுப்பு வகித்து வருபவருமான எ.வ.வேலு தொடர்புடைய சுமார் 40 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்ற திமுக அமைச்சர்களைப் போலவே, கல்வி, தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர். வருமானத்திற்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
அவரின் சொந்த சட்டமன்றத் தொகுதியான திருவண்ணாமலையிலும் சோதனைகள் நடைபெற்றன.
திமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வருமானவரி சோதனைகள் திமுகவில் ஊழல் விவகாரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
இந்த சோதனைகள் பாஜக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை என்று தொடர்ந்து திமுக சாடி வருகிறது. எனினும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் நடவடிக்கைகள் அந்தக் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.