Home இந்தியா ஸ்டாலினுக்கு மைசூர்பாரு இனிப்பு வாங்கித் தந்த ராகுல் காந்தி!

ஸ்டாலினுக்கு மைசூர்பாரு இனிப்பு வாங்கித் தந்த ராகுல் காந்தி!

369
0
SHARE
Ad

கோயம்புத்தூர் : தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்ய ஏப்ரல் 12-ஆம் தேதி கோயம்புத்தூர் வந்தார் ராகுல் காந்தி. இது காலதாமதமான வருகை என்றாலும் நெல்லை, கோவை போன்ற இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார் ராகுல்.

கோவையில் ஸ்டாலினோடு இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தார். கோவை, தமிழ் நாடு தலைவர் அண்ணாமலை போட்டியிடும் தொகுதி என்பதால் இங்கு கூடுதல் கவனம்!

ராகுலின் பிரச்சாரத்தை விட – அவர் தன் உரையில் என்ன கூறினார் என்பதை விட – ஓர் இனிப்புக் கடைக்குள் அதிரடியாக நுழைந்து ஸ்டாலினுக்காக மைசூர்பாகு வாங்கித் தந்ததுதான் – சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்ட காணொலி!

#TamilSchoolmychoice

ராகுல் திடீரென காரை விட்டிறங்கி, சாலையின் தடுப்புச் சுவர்களைத் தாண்டி சாலையின் மறுபுறத்தில் இருந்த ஓர் இனிப்பகக் கடைக்கு சென்றார்.

அங்கு கடை ஊழியர்கள், அவர் சுவைப்பதற்கு இனிப்புகளை எடுத்துக் கொடுக்க அதைச் சுவைத்துப் பார்த்தார். அங்குள்ள ஊழியர்களிடம் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் சமூக ஊடகங்களில் இப்போதைக்கு டிரெண்டிங் – அதாவது அதிகமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் காணொலி!

யாருக்கு இனிப்பு வாங்குகிறீர்கள் என ஒருவர் கேட்க – “எனது சகோதரர் ஸ்டாலினுக்கு” என பதிலளித்தார் ராகுல்.

அதேபோல் அந்தக் கடையில் வாங்கிய மைசூர் பாகு இனிப்பை – பின்னர் பிரச்சார மேடைக்குச் சென்றபோது நேரடியாக ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் ராகுல்.