கோலாலம்பூர் : சயாம் மரண ரயில்வே விவகாரம் மீதான ஆர்வலர் குழுவினர் வரலாற்றுபூர்வ சயாம் மரண ரயில்வே தொடர்பான இடங்களுக்கான சுற்றுலாவை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த சுற்றுலா குறித்த விளக்கக் கூட்டம் சனிக்கிழமை (4 மே 2024) சீன அசெம்பிளி மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
சயாம் மரண ரயில்வே சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 3 ஜூன் 2023-ஆம் நாள் நினைவுச் சின்னம் ஒன்று மிகப் பிரம்மாண்டமான விழாவில் நிர்மாணிக்கப்பட்டது.
அந்த நினைவுச் சின்னத் திறப்பு விழாவின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு, சயாம் மரண ரயில்வே ஆர்வலர் குழு 5 நாட்களுக்கான சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்த சுற்றுலாப் பயணத்தின் ஒரு பகுதியாக காஞ்சனாபுரியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த நினைவுச் சின்னத்திற்கான வருகை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு சிறப்பு வழிபாடுகளும், நினைவுகூரும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். 2 ஜூன் 2024-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் (உத்தேச நேரம் – இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை) நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.
அல்லது கீழ்க்காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுற்றுலாவில் ஆர்வமுள்ளவர்கள் பங்கு பெறலாம்.
சுற்றுலா விவரங்கள்
சயாம் மரண ரயில்வே தொடர்பான இடங்களுக்கான சுற்றுலா, இரயில் மூலம் கோலாலம்பூர் பழைய ரயில்வே நிலையத்திலிருந்து 31 மே 2024-ஆம் நாள் தொடங்குகிறது.
சுற்றுலா முடிந்து ஜூன் 4-ஆம் தேதி பாங்காக்கில் இருந்து குழுவினர் கோலாலம்பூர் திரும்புவர்.
இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் RM 1,700-00 ஆகும் (உறுப்பினர்களுக்கு).
பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி உயிரிழந்த எஸ்.ஏ.கணபதியையும் வீரசேனனையும் நினைவு கூரும் 75-வது ஆண்டின் நினைவு நாளில் அவர் குறித்த நூல் ஒன்று வெளியீடு காணவிருக்கிறது.
பார்ட்டி ராக்யாட் மலேசியா கட்சியும், சயாம் மரண ரயில்வே ஆர்வலர் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, சயாம் மரண ரயில்வே தொடர்பான சுற்றுலா நிகழ்ச்சி குறித்த விளக்கக் கூட்டம் நடைபெறும்.
பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் கணபதி – வீரசேனன் நினைவு நிகழ்ச்சியின் இடையில் மாலை 4.30 மணியளவில் சுற்றுலா குறித்த விளக்கக் கூட்டம் நடைபெறும்.
கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
+6017-8887221 அல்லது +6012-2729772
Death Railway Interest Group (DRIG) Malaysia