Home உலகம் அன்வார், ஹாமாஸ் தலைவர்களை கத்தாரில் சந்தித்தார்

அன்வார், ஹாமாஸ் தலைவர்களை கத்தாரில் சந்தித்தார்

313
0
SHARE
Ad

டோஹா (கத்தார்) : கத்தார் நாட்டிற்கு 3 நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஹாமாஸ் பேராளர் குழுவைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். ஹாமாஸ் பேராளர் குழுவுக்கு அதன் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹானியே தலைமை தாங்கினார்.

பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலியத் தாக்குதலில் தன் குடும்ப உறுப்பினர்களை இழந்த இஸ்மாயில் ஹானியேவுக்கு தன் அனுதாபங்களை அன்வார் தெரிவித்துக் கொண்டார். இஸ்ரேலியத் தாக்குதலில் தனது 3 மகன்களையும் 4 பேரக் குழந்தைகளையும் இஸ்மாயில் ஹானியே பலிகொடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, பாலஸ்தீனத்தின் அண்மைய நிலவரம் குறித்து தான் விளக்கம் பெற்றதாகவும் அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எட்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹாமாஸ் மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் அல்லது காயமடைந்திருக்கின்றனர் எனச் சுட்டிக் காட்டிய அன்வார் காசா பகுதி பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தன் முகநூல் பக்கத்தில் ஹாமாஸ் தலைவர்களுடனான சந்திப்பு குறித்த படங்களுடன் பதிவிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தாரின் எமிர் (ஆட்சியாளர்) ஷேக் தமிம் ஹாமாட் அல் தானி கத்தார் அழைப்பினை ஏற்று வந்தடைந்த அன்வார், அவரைச் சந்தித்ததோடு, 2024 கத்தார் பொருளாதாரக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டார்.