Home இந்தியா நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்!

நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல்!

344
0
SHARE
Ad
வாரணாசி வாகன ஊர்வலத்தில் மோடி

வாரணாசி : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று செவ்வாய்க்கிழமை (மே 14) ஒரு சிறந்த முகூர்த்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

நேற்று திங்கட்கிழமை வாரணாசியில் பிரம்மாண்ட பிரச்சார ஊர்வலத்தையும் அவர் நடத்தினார்.

இன்று வேட்புமனுவைச் சமர்ப்பிக்க வந்த அவருடன் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உடன் வந்தார். அதே வேளையில் நாடு முழுமையிலும் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் மோடிக்கு ஆதரவாக வாரணாசியில் குழுமியுள்ளனர்.

#TamilSchoolmychoice

தமிழ் நாட்டில் இருந்து ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் வாரணாசி வந்திருக்கின்றனர்.

2014-ஆம் ஆண்டில் முதன் முதலில் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் ஒரே சமயத்தில் குஜராத்திலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பின்னர் குஜராத் மாநிலத்திலுள்ள வடோடாரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து 2019-இல் வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார். இந்த முறையும் வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.