Home உலகம் அமெரிக்க அதிபர் தேர்தல்: இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் கமலா – டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல்: இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் கமலா – டிரம்ப்!

177
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) நடைபெறுகிறது. தேர்தல் ஆண்டில் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று வாக்களிப்பு நடைபெறும். எனினும் பல மாநிலங்களில் முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கி விட்டது. இதுவரையில் 78.9 மில்லியன் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்திவிட்டனர்.

கமலா ஹாரிசும், டிரம்பும் தங்களின் இறுதிக் கட்டப் பிரச்சாரங்களை மும்முரமாக மேற்கொண்டு நிறைவு செய்துள்ளனர். அதிபர் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சில முக்கிய மாநிலங்களில் அவர்கள் இருவரும் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக இப்போதே டிரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

பென்சில்வேனியா மாநிலத்தில் 5 பிரச்சார நிகழ்ச்சிகளை கமலா நடத்தினார். தனது இறுதிப் பிரச்சாரத்தை அந்த மாநிலத்தின் பிலாடெல்பியா மாநிலத்தில் மேற்கொண்டார்.

இதற்கிடையில் டிரம்ப் நோர்த் கரோலினா, பென்சில்வானியா, மிச்சிகன் ஆகிய 3 மாநிலங்களில் இறுதிநேர சூறாவளிப் பிரச்சாரங்களை நடத்தினார்.

யார் வெற்றி பெற்றாலும், வாக்கு வித்தியாசம் மிகக் குறைவானதாகவே இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இறுதி நேரத்தில் டிரம்புக்கு ஆதரவு பெருகி வருவதாகக் கருதப்படுகிறது. அதே வேளையில் பல சினிமாப் பிரபலங்களும் பிரமுகர்களும் தங்களின் ஆதரவை கமலாவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.