மும்பை : எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலின் அடுத்த கட்டப் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
288 இடங்களைக் கொண்ட கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கான தேர்தல் நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. முடிவுகள் நவம்பர் 23 அன்று அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பை 36 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கிறது. இந்த 36 தொகுதிகளில் 420 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் கட்சிகளுக்கிடையே பிளவுகள் ஏற்பட்டிருப்பதால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
தமிழ் நாட்டுக்கு வெளியே சினிமாவின் தலைமையகமாக இயங்கும் நகர் மும்பைதான் என்றாலும் ஏனோ இந்தி நடிகர்கள்-நடிகைள் யாரும் அவ்வளவாக அரசியலில் அங்கு ஆர்வம் காட்டுவதில்லை.