Home நாடு பத்துமலை திருத்தலத்தின் மற்றொரு புதிய அடையாளம் இந்திய கலாச்சார மையம்!

பத்துமலை திருத்தலத்தின் மற்றொரு புதிய அடையாளம் இந்திய கலாச்சார மையம்!

73
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய இந்துக்களின் அடையாளச் சின்னமாக திகழ்வது பத்துமலை திருத்தலம். அனைத்துலக நிலையில் தைப்பூசத்திற்கென அதிக அளவில் பக்தர்கள் திரளும் ஆலய வளாகங்களில் பத்துமலையும் ஒன்று.

பத்துமலை வளாகத்திற்குள் இந்து மத, கலாச்சார, மலேசிய இந்தியர்களின் பாரம்பரியம் என பல அடையாள அம்சங்கள் அடையாளங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

பிரம்மாண்டமான முருகன் சிலை, பத்துமலை குகைக்குள் செல்லும் வண்ணமயமான படிக்கட்டுகள், இராமாயண குகை, திருவள்ளுவர் குகை, போன்றவற்றின் நடுவில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது இந்திய கலாச்சார மையம்.

#TamilSchoolmychoice

இந்த கலாச்சார மையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19-ஆம் தேதி மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன்,  மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என்.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் மிகச் சிறப்பான முறையில் திறப்பு விழா கண்டது. தமிழர்-இந்தியர் கலாச்சாரங்களின் இயல், இசை, நாடக பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் மையமாக இது திகழும். கட்டடக் கலை, ஓவியம், சிற்பக் கலை, கைவினைக் கலை ஆகிய எல்லா துறைகளிலும் நாம் தேர்ச்சி பெற்றுள்ளோம். நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் பணியை இம் மையம் ஆற்றும்” என இந்தக் கலாச்சார மையத்தின் திறப்பு விழா குறித்து சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.