சென்னை : அண்மையில் வெளிவந்த ‘அமரன்’ படத்தில் காதலியாகவும் அன்பு மனைவியாகவும் நடிப்பில் கலக்கியிருந்தார் சாய் பல்லவி. அடுத்து, தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கும் தண்டேல் என்ற படத்தில் நாக சைதன்யாவுடன் இணைகிறார் சாய் பல்லவி.
இந்தப் படத்திலும் மீன் பிடிக்கச் செல்லும் காதல் கணவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கதாபாத்திரம். மீனவக் கணவனாக நாக சைதன்யா நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியீடு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தியும் கலந்து கொண்டார்.
தண்டேல் என்றால் மீனவர்களின் குழுவின் தலைவன் என்று பொருள்படுமாம்.
எதிர்வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் அதே தேதியில் வெளிவரவிருக்கும் அஜித்தின் விடாமுயற்சியுடன் மோதுகிறது. பொதுவாக விஜய், அஜித் படங்கள் வெளியாகும் தேதியில் மற்ற தமிழ்ப்படங்கள் மோதாமல் ஒதுங்கிக் கொள்ளும். ஆனால் தண்டேல் துணிச்சலுடன் விடாமுயற்சியுடன் மோதுகிறது.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் யூடியூப் தளத்தில் காணலாம்: