இலங்கை, மே 3- இலங்கையின் மின்சக்தி வளத்துறையின் மேம்பாட்டுக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
இலங்கை வந்துள்ள ஜப்பானிய உதவி பிரதமர் டாரோ அசோ தலைமையில் பிரதிநிதிகள் குழு நேற்று ஜனாதிபதியை சந்தித்திருந்தது. இதன் போது இது குறித்து இணக்கப்பாடு காணப்பட்டது.
வினைத்திறனான வகையில் மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப முறைமைகளை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பானிய உதவி பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு நாடுகளுக்கு இடையிலே சிறந்த வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ளவது தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டுள்ளது.