Home நாடு லகாட் டத்து விவகாரத்தில் 3 எதிர்கட்சித் தலைவர்கள் சம்பந்தம்? பெயர்களை வெளியிடாதது ஏன்?

லகாட் டத்து விவகாரத்தில் 3 எதிர்கட்சித் தலைவர்கள் சம்பந்தம்? பெயர்களை வெளியிடாதது ஏன்?

544
0
SHARE
Ad

zahid feature

கோலாலம்பூர், மே 21 – “லகாட் டத்து ஊடுருவலுக்கு எதிர்கட்சியைச் சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் தான் காரணம். ஆனால் அவர்களது பெயரை இப்போதைக்கு வெளியிடப்போவதில்லை” என உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் தெரிவித்துள்ளார்.

மேலும்  அந்த மூவரில் இருவர் தீபகற்ப மலேசியாவையும், ஒருவர் சபா மாநிலத்தையும் சேர்ந்தவர் என்றும், அவர்கள் 3 பேர் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் விரைவில் சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

லகாட் டத்துவில் பாதுகாப்புப் படையினருக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்கட்சியைச் சேர்ந்த 3 பேர் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால் அப்போது பொதுத்தேர்தலை காரணம் காட்டி அவர்களது பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.

தற்போது தேர்தல் முடிந்து தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைத்து, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பிறகும்  கூட, இன்னும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் சாஹிட் கூறுவது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.