Home உலகம் ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை

ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை

639
0
SHARE
Ad

juliaமெல்போர்ன், ஜூன் 3- உலகிலேயே நிம்மதியாக வாழ்க்கை நடத்தக்கூடிய நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.

இந்த நாட்டில் உலக நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள் குடியேற விரும்புகின்றனர்.

இந்நிலையில் இந்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், லேபர் கட்சியினருடன் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு (படம்) கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புகிற இந்தியர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படவும், அவர்கள் விரைவில் குடியுரிமைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் நாங்கள் துரிதப்படுத்தியிருக்கிறோம் என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.

மேலும், இந்தியாவுடனான எங்கள் தொடர்புகளை வலுப்படுத்தி கொள்ள நாங்கள் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.