கோலாலம்பூர், ஜூன் 26 – பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் எதிர்கட்சித் தலைவராக 13 வது நாடாளுமன்றத்தில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிமை எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியா இன்று அறிவித்தார்.
“நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவி வகிக்க, மக்கள் கூட்டணி உறுப்பினர்களின் அமோக ஆதரவை அன்வார் இப்ராகிம் பெற்றுள்ளார்” என்று பண்டிகார் அமின் மூலியா தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், 12 வது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அன்வார் இப்ராகிம் முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.