Home உலகம் திபெத் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனாவிற்கு அமெரிக்கா வற்புறுத்தல்

திபெத் தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனாவிற்கு அமெரிக்கா வற்புறுத்தல்

538
0
SHARE
Ad

வாஷிங்டன், ஜூன் 28- இமயமலைத்தொடரின் வட கிழக்கே அமைந்துள்ள திபெத் நாட்டை 50 ஆண்டுகளுக்கு முன்பு சீனா கைப்பற்றிக்கொண்டது.

dalai-lama பின்னர் அங்கிருந்து தலாய் லாமா தலைமையில் தப்பித்து வந்தவர்கள் இமாச்சல் பிரதேசத்தில்  தங்கி தனி அரசாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் திபெத் மதத்தலைவர் தலாய் லாமாவுடனோ அல்லது அவரது பிரதிநிதிகளுடனோ நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடத்த சீனாவை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அமெரிக்கர்கள் சீனாவை சுற்றிப்பார்க்க அபூர்வமாக அனுமதித்ததைப்போல் திபெத்திற்கும் சென்றுவர அனுமதி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

திபெத்தின் மனித உரிமை பிரச்சினைகள் மற்றும் தற்போதைய தீக்குளிப்பு சம்பவங்களால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து உண்மையில் சீனா பேசவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனாவிற்கான அமெரிக்க தூதர் கெரி லாக், திபெத் பகுதிகளை பார்வையிடவும், அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுவும் தயராகிவருகிறார்.