Home உலகம் வங்கதேச பிரதமருக்கு கொலை மிரட்டல்: பேராசிரியருக்கு 7 ஆண்டு சிறை

வங்கதேச பிரதமருக்கு கொலை மிரட்டல்: பேராசிரியருக்கு 7 ஆண்டு சிறை

612
0
SHARE
Ad

BANGLADESHடாக்கா, ஜூன் 28- வங்காள தேச பிரதமராக ஷேக் ஹசீனா  (படம்) பதவி வகித்து வருகிறார். ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வங்காள தேச பொறியியல்  மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஹபிஷூர் ரஹ்மான் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

இவர் மீது மெட்ரோ பாலிட்டன் செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.