டாக்கா : வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதிநிதிக்கும் ஆளும் கட்சி, அந்நாட்டின் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றுள்ளது என வங்காளதேசத் தேர்தல் ஆணையம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது.
ஹசீனாவின் அவாமி கூட்டணிக் கட்சி ஆதிக்கம் செலுத்திய 298 இடங்களில் 287 இடங்களை வென்றது. 2014-ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்த முக்கிய எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சி (Bangladesh National Party), வெறும் ஆறு இடங்களை மட்டுமே வென்றது.
ஹசீனாவின் இந்த வெற்றியானது கடந்த ஆண்டுகளில், அவர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வந்ததைக் குறிக்கிறது என கூறப்படுகிறது. அதே வேளையில், மனித உரிமை மீறல்கள், ஊடகங்கள் மீதான வன்முறை, மற்றும் தம் மீதான எதிர்ப்பை அடக்குதல் போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது வைக்கப்படுகின்றன.