Home நாடு கேஎல்சிசியில் புத்தாண்டு வாணவேடிக்கைக் கொண்டாட்டம்!

கேஎல்சிசியில் புத்தாண்டு வாணவேடிக்கைக் கொண்டாட்டம்!

802
0
SHARE
Ad

Fireworks explode near Malaysia's landmark Petronas Towers during the New Year celebrations in Kuala Lumpur, Malaysia, 01 January 2015. Malaysia celebrates the New Year 2015 in modest mood in honor to the victims of the Malaysia Airlines MH370 and MH17 plane tragedies and floods that hit the country at this time claimed 24 lives and more than 200,000 have been evacuatedகோலாலம்பூர்: இன்றிரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க, கேஎல்சிசி (ஹோல்டிங்ஸ்) சென்டெரியான் பெர்ஹாட் (KLCCH Sdn Bhd) நிறுவனம் அனைத்து மக்களையும் கேஎல்சிசி கார் நிறுத்தும் இடத்திற்கு அழைக்கிறது.

சமாதானம், ஒற்றுமை மற்றும் அமைதியாக இந்தப் புத்தாண்டை பல விதமான விளக்குகளுடனும், வண்ணங்களுடனும், இசை நிகழ்ச்சிகளுடனும் வரவேற்போம். கண்கவர் இசையோடுக் கூடிய வாணவேடிக்கை காட்சிகளையும் கண்டு மகிழ்வோம்” என அறிக்கை ஒன்றின் வாயிலாக அந்நிறுவனம் கூறியது.

மேலும், மூன்று மணி நேரத்திற்கு இடைவிடாது இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கலை நிகழ்ச்சி இன்றிரவு 9:00 மணிக்கு ஆரம்பித்து, நள்ளிரவில், இசையோடு கலந்த வாணவேடிக்கை காட்சிகளுடன் முடிவடையும்.

#TamilSchoolmychoice

2018-ஆம் ஆண்டின் மறக்கமுடியாத தருணங்களை நன்முறையில் கொண்டாடி, 2019-ம் ஆண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என கேஎல்சிசி தெரிவித்தது.