Home நாடு செல்வாக்கு மிக்க உலக முஸ்லீம்கள் பட்டியலில் மகாதீர் முதலிடம்!

செல்வாக்கு மிக்க உலக முஸ்லீம்கள் பட்டியலில் மகாதீர் முதலிடம்!

659
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துன் மகாதீர் முகமட், இந்த ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க முஸ்லீம் என ‘தி முஸ்லீம் 500’ இணையத்தளம் அறிவித்தது.

கடந்த 10 ஆண்டுகளில், உலகளாவிய அளவில் ஒட்டுமொத்த விபரங்களைத் திரளாகச் சேர்த்து தொகுக்கப்பட்ட தரவரிசையில் மகாதீர் முதலிடம் பிடித்தார். தி ரோயல் இஸ்லாமிக் சென்ட்டர் (The Royal Islamic Centre) மற்றும் ரோயல் ஆல் அல்பேட் நிறுவனமும் (Royal Al-Bayt Institute) இணைந்து இந்த விபரங்களை https://www.themuslim500.com/ என்ற இணையத்தளத்தில் வெளியிட்டன.    

மலேசியாவில் இரு முறை பிரதமரான சிறப்பும், உலகிலேயே வயதான பிரதமராக மகாதீர் திகழ்வதும் இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டு, பொருளாதாரம் மற்றும் கல்வியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்ட காலக்கட்டத்தில் 17 நூல்களை அவர் எழுதி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

முதல் முறை, பிரதமராகப் பதவி வகித்த போது, அவர் புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) எனும் திட்டத்தினை மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தியதும், பின்பு, 2015-ஆம் ஆண்டு அப்போதைய நடப்பு பிரதமரான டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை பதவி விலகுமாறு கூறியதும் அப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

2017-ஆம் ஆண்டு பெர்சாத்து கட்சியினை ஆரம்பித்து, நம்பிக்கைக் கூட்டணியில் (பக்காத்தான் ஹரப்பான்) ஒன்று சேர்ந்தார். அப்போதைய நடப்பு ஆளும் கட்சியான தேசிய முன்னணியை 14-வது பொதுத் தேர்தலில் வீழ்த்தியதும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இந்த ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க முஸ்லீம் பெண்மணியாக பாலஸ்தீனிய இளையப் பெண்மணி அஹேட் தாமிமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.